புகையிலை பொருட்கள் விற்றகடைக்காரர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்றகடைக்காரர்களுக்கு  அபராதம்
x

நாமக்கல்லில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின்படி, அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து கடந்த 2 நாட்களாக மங்களபுரம், மெட்டலா மற்றும் மோகனூர் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகை கடைகள் உள்பட 30 கடைகளில் தடைசெய்யப்பட்ட "கூல் லிப், ஹான்ஸ்" போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். இதில் 6 கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் 110 பாக்கெட்டுகள், மற்றும் விமல் பாக்கு 85 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.12,300 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இனிவரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் செயல்படும் கடைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story