மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை


மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை
x

சேலத்தில் மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுத்தார்.

சேலம்

சேலம்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரிகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சில தனியார் ஆஸ்பத்திரிகள் மருத்துவ கழிவுகளை மற்ற கழிவுகளுடன் சேர்த்து பொது இடங்களில் கொட்டுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் குரங்குச்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அந்த ஆஸ்பத்திரி, மருத்துவ கழிவுகளை சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்காமல் பொதுஇடங்களில் கொட்டுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story