மரம் வெட்டியவருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்

கொல்லிமலை வன எல்லையில் மரம் வெட்டியவருக்கு வன அலுவலர் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்
சேந்தமங்கலம்
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் பைல்நாடு ஊராட்சியில் கழுவூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வன எல்லைப் பகுதியில் இருந்த சில மரங்களை அனுமதியின்றி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தபகுதி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கழுவூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வன எல்லைப் பகுதியில் மரங்களை வெட்டியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story






