பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 92 கடைக்காரர்களுக்கு ரூ.1¾ லட்சம் அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 92 கடைக்காரர்களுக்கு ரூ.1¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 24 April 2023 9:00 PM GMT (Updated: 24 April 2023 9:00 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 92 கடைக்காரர்களுக்கு ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், பிளாஸ்டிக் காகிதம் உள்பட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடப்பதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடையை மீறி 92 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். இதில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் மட்டும் 18 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story