சாராயம் விற்ற 5 பேருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்


சாராயம் விற்ற 5 பேருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
x

கெங்கவல்லி பகுதியில் உதவி கலெக்டரின் உத்தரவை மீறியதால் சாராயம் விற்ற 5 பேருக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நடவடிக்கை

சேலம்

கெங்கவல்லி

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சந்து கடை மற்றும் சாராயம் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதில், கெங்கவல்லியை சேர்ந்த ரமேஷ் (வயது42), ராஜா, ஒதியத்தூரை சேர்ந்த பரிமளா (37), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லதா (36), கூடமலையை சேர்ந்த சக்திவேல் (48) ஆகிய 5 பேர் மீது ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அவர்கள் நன்னடத்தை பிணைப்பத்திரம் காலத்தில் தொடர்ச்சியாக சாராயம் மற்றும் மதுவை பதுக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா பிறப்பித்த அந்த தொகையை 5 பேரும் அரசின் கணக்கில் செலுத்தினர்.

சேலம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.


Next Story