அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகளுக்கு அபராதம்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்கள் உள்ளிட்டவை அளவுக்கு அதிகமாக லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி அருகே பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரு லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால், மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த லாரியை பறிமுதல் செய்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story