குடிநீர் குழாயை சேதப்படுத்தியவருக்கு அபராதம்
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவருக்கு அபராதம்
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை அப்புறப்படுத்தவும் மேயர் சங்கீதா இன்பம் உத்தரவின் பேரில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் வேலாயுதம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் தனது வீட்டின் அருகில் சென்ற மாநகராட்சி குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் முத்துராஜ், கமிஷனர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து கமிஷனர் சங்கரன், பிரசாந்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் சாலையில் மாடுகளை திரியவிட்ட மணிகண்டன் என்பவருக்கு ரூ.5 ஆயிரமும், சரவணன் என்பவருக்கு ரூ.13 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story