மின்கட்டண பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அனுமதிக்க வேண்டும்


மின்கட்டண பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்


கருமத்தம்பட்டி

மின்கட்டண பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசைத்தறி உரிமையாளர்கள்

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவினாசி சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி, தெக் கலூர் தலைவர் பொன்னுசாமி, சோமனூர் சங்க பொருளாளர் பூபதி, கண்ணம்பாளையம் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலவச மின்சாரம்

விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட் ஆக உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து கொள்வது,ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பில் இருந்து விசைத்தறி டேரிப் III A2 க்கு முழு விலக்கு அளித்து பல லட்சம் விசைத்தறியாளர்களை பாதுகாக்க வேண்டும்.

மின்கட்டண உயர்வின் போது மின் கட்டணம் கட்டாமல் நிலுவையில் உள்ள தொகையை எந்த அபராதம், வட்டியும் இல்லாமல் 10 தவணைகளாக பிரித்து செலுத்த அனுமதிக்க வேண்டும்.

அனுமதி வழங்க வேண்டும்

இல்லை என்றால் நடப்பு தொகை ஒரு மாதமும், நிலுவைத் தொகை ஒரு மாதமும் செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.

மின்வாரியம் உயர்த்தி அறிவித்த மின்கட்டணத்தை குறைத்து ரூ.1.40 என்பதை 0.70 பைசாவாக கணக்கீடு செய்து குறைத்து அறிவிக்கும் வரை விசைத்தறியாளர்கள் ரூ.1.40 உயர்த்தி மின் கணக்கீடு செய்த தொகையை செலுத்துவது இல்லை என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story