புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:56 AM GMT)

திரூவாருர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அரசு-தனியார் பள்ளிகள் அருகே 100 மீட்டர் வரை கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்க கூடாது என விழிப்புணர்வு விளம்பரங்கள், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஹேமச்சந்த காந்தி உத்தரவுப்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் வழிகாட்டுதல்படி முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், செந்தில், கதிரவன், பாலசண்முகம், விக்னேஷ் ஆகியோர் அடங்கிய சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story