சங்கராபுரத்தில் புகையிலைப்பொருட்கள் விற்பனை; 5 கடைகளுக்கு அபராதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சங்கராபுரத்தில்    புகையிலைப்பொருட்கள் விற்பனை; 5 கடைகளுக்கு அபராதம்    சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 5 கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பகுதி பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் சென்றன.அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story