சுகாதாரமின்றி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்


சுகாதாரமின்றி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 27 Sep 2023 1:30 AM GMT (Updated: 27 Sep 2023 5:56 PM GMT)

வடமதுரை பகுதியில் சுகாதாரமின்றி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா உத்தரவின் பேரில், வடமதுரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி தலைமையிலான சுகாதார குழுவினர் வடமதுரை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதாரமின்றி செயல்பட்ட 6 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் கொசுப்புழு கண்டறியப்பட்ட 4 கடைகளில், ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்களில் பாதுகாப்பான வெந்நீர் வழங்க வேண்டும், டிரம்களில் கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் அதனை மூடி வைக்க வேண்டும், சமையலறையில் தேவையில்லாத டப்பா உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், தங்கராஜ், மனோஜ், பாலகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story