குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம்அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம்அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:45 PM GMT)

குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கலந்தாய்வு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசும்போது கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். இதனை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அபராதம்

மேலும் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதிவேகம், குடிபோதையில் வாகனம் இயக்குவதால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்ஆனந்த் மோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story