நிலுவைத்தொகை வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்


நிலுவைத்தொகை வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
x

நிலுவைத்தொகை வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் தங்கவேலு ஆகியோர் தலைமையில் நடந்தது. சங்கத்தின் நிறுவனர் அய்யணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் அறிவுறுத்தியபடி 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலத்திற்கும் நிலுவைத்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். ஓய்வூதியர்கள் மரணமடைவதை தொடர்ந்து துணைவி அல்லது சட்டப்பூர்வமான வாரிசுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி உதவி தொகையை 3 மாதத்திற்குள் வழங்க ஓய்வூதிய இயக்குனர் உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story