ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
வாணாபுரத்தில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
வாணாபுரம்
வாணாபுரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க சங்கராபுரம் வட்ட பேரவைக்கூட்டம் தலைவர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கராபுரம் தாலுகாவில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்ட வாணாபுரம் தாலுகாவில் புதிதாக பேரவையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்ட துணைத்தலைவர் பொன்னம்பலம், மாவட்ட தலைவர் மோகன், உடற் கல்வி இயக்குனர் தெய்வீகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகள் குணசேகரன், அன்பழகன், செல்வராணி, பெரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ரத்தினவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story