ஓய்வூதியர்கள் 23-ந்தேதிக்குள் மேல்முறையீடு அனுப்பலாம்


ஓய்வூதியர்கள் 23-ந்தேதிக்குள் மேல்முறையீடு அனுப்பலாம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ செலவினம் திரும்பக்கோரும் ஓய்வூதியர்கள் 23-ந்தேதிக்குள் மேல்முறையீடு அனுப்பலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

அரசு பணியாளர்களின் 1.7.2021 காலத்திற்கு முந்தைய மருத்துவ செலவினம் திரும்பக் கோரும் மேல் முறையீடுகள் மற்றும் ஓய்வூதியர்களின் 1.7.2022 காலத்திற்கு முற்பட்ட மருத்துவ செலவினம் திரும்பக்கோரும் மேல் முறையீடுகள் பரிசீலிக்க உள்ளது. இதன் அடிப்படையில் பணியாளர்களின் மேல்முறையீடுகள் பணம் பெறும் அலுவலர்கள் மூலமாகவும் மற்றும் ஓய்வூதியர்களின் மேல் முறையீடுகள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ 23.2.2023-க்குள் கடலூர் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story