ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஓய்வு பெற்ற காவலர் நல சங்க மாவட்ட தலைவர் நடேசன், மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான மருத்துவ படிப் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதல் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், துணை தலைவர் சேகர் மற்றும் அரசு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.