தாசில்தாரை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் தாசில்தாரை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்
விருத்தாசலம்,
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தினர் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கொட்டகையை, ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியர் சங்கத்திற்கு வழங்கிய தாசில்தாரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ராமலிங்கம், டென்சிங், குமாரசாமி, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் வீராசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் முத்துகிருஷ்ணன், திருநாவுக்கரசு, ஆதிமூலம் மற்றும் நிாவாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டுரெங்கன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story