பழவேற்காடு, கடம்பத்தூர் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைப்பு


பழவேற்காடு, கடம்பத்தூர் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைப்பு
x

பழவேற்காடு, கடம்பத்தூர் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, பேரிடம் மையம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்படனர்.

திருவள்ளூர்

பள்ளிகளில் தங்க வைப்பு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்து கொண்டது இந்நிலையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், பள்ளிகளாகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் உத்தரவிட்டார்.

அதன்படி பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் நேரடி பார்வையில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.

உணவுகள் வழங்கினர்

கோரைக்குப்பம் கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பழவேற்காடு பழங்குடியினர் காலனியில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதிசரவணன், கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், கள்ளூர் ஊராட்சியில் தலைவர் முனிசுந்தரம், அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், காட்டுப்பள்ளி ஊராட்சியில் தலைவர் சேதுராமன் ஆகியோர் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை வழங்கினர். வீடுகள் சேதம் அடைந்த லைட்ஹவுஸ்குப்பம் ஊராட்சி மக்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் செல்வழகிஎர்ணாவூரான் தார்பாய், அரிசி, காய்கறி ஆகியவற்றை வழங்கினார். மெதூர் ஊராட்சியில் 5 மின்கம்பங்கள் கீழே விழுந்தது, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் 15 மாடுகள் பழவேற்காடு ஏரியில் அடித்து செல்லப்பட்டது. பெரியகரும்பூர் ஊராட்சியில் 5 வீடுகளில் மீது மரங்கள் விழுந்த வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

கடம்பத்தூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கும் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கன்னிமாநகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 25 பேரை கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் மீட்டு, அப்பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தார். திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் கடம்பத்தூர் கன்னிமாநகர் ஊராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அப்பகுதி மக்களுக்கு பாய், தலையணை, போர்வை, பிஸ்கட் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் உடன் இருந்தனர்.


Next Story