மதுரையில் ஒரு மணி நேரம் சாரல் மழை-வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


மதுரையில் ஒரு மணி நேரம் சாரல் மழை-வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x

மதுரையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை


மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மழை பெய்வது போல் கருமேகங்கள் ஒன்று திரண்டன. ஆனால், மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மதுரையில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழையாக நீடித்தது. மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால், வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. நேற்று பெய்த மழையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story