கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் டவுன், தாந்தோணிமலை போலீசார் அந்தந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பகுதியில் முத்துராஜபுரத்தை சேர்ந்த பூபாலன் (வயது 39), குண்டுமணி (47) ஆகியோரும், திருமாநிலையூர் காட்டு பகுதியில் கிருஷ்ணராய புரத்தை சேர்ந்த மகாதேவன் (35) என்பவரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story