பொதுஇட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த தம்பதிக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து இடத்தை ஒப்படைக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த தம்பதிக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து இடத்தை ஒப்படைக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுமனை பட்டா
வந்தவாசி அருகே கடைசிகுளம் கிராமத்தில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு 99 பேருக்கு அரசு வீட்டு மனைப்பட்டா வழங்கியது. அந்த இடத்தில் 99 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள பொது இடத்தின் ஒரு பகுதியை ஒரு தம்பதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடத்துக்கு வருவாய்த் துறையினரும் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும், ஆக்கிரமிப்பை அகற்றி அந்த பொது இடத்தை மீட்டு தரக்கோரியும் தாலுகா அலுவலகத்தை ஜெ.ஜெ.நகர் பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
துணை கலெக்டரிடம் மனு
இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தினுள் சென்ற அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் மனு அளித்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார் வந்தவாசி தாசில்தார் ராஜேந்திரன் உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.