பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட கூடியிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல், கூழையார் வரை 8 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லக்கூடிய ஒரு பஸ் செம்மங்குடி, கீராநல்லூர், திருகரூக்காவூர் வழியாக திருமுல்லைவாசலுக்கு காலை மாலை என இரு வேளை மட்டும் வருவதாகவும் மற்ற நேரங்களில் பஸ் வருவதில்லை என கூறினர். இதுகுறித்து சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கிளைமேலாளர் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாகவும், திருகரூக்காவூர் வழியாக திருமுல்லைவாசலுக்கு பஸ் இயக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.


Related Tags :
Next Story