சகாயநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சகாயநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

சகாயநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்ெசய்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகபுரம், அனந்த பத்மநாபபுரம் பகுதியில் சில வாரங்களாக முறையாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் அனந்தபத்மநாபபுரம் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி, வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சார், ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

---


Next Story