பொதுப்பாதையில் கழிப்பிடம் கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது-ஐகோர்ட்டு அதிரடி


பொதுப்பாதையில் கழிப்பிடம் கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது-ஐகோர்ட்டு அதிரடி
x

அரசு பொது நிதியை செலவிடும்போது அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

பூந்தமல்லி அடுத்துள்ள அடையாளம்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை இடிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில், பிரசாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ள நிலம் பொதுப்பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் வருகிறது என்பதால் புதிய இடம் கண்டறியப்பட்டு கழிப்பிடம் கட்டப்படவுள்ளதாக அரசு தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், பொதுக் கழிப்பிடத்தை பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்ட முடியாது. அரசு பொது நிதியை செலவிடும்போது அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மக்களின் வரிப்பணமான பொதுநிதியை வீணாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறுதலாக பொதுப்பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் பொதுக்கழிப்பிடத்தை கட்டிவிட்டோம் என அதிகாரிகள் கூற முடியாது. எனவே 6 வாரங்களில் மாற்று இடத்தை தேர்வு செய்து, அதன்பிறகு இந்த பொதுக்கழிப்பிடத்தை இடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story