பூம்புகார் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மாற்றுப்பாதையை பலப்படுத்த நடவடிக்கை


பூம்புகார் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மாற்றுப்பாதையை பலப்படுத்த நடவடிக்கை
x

பூம்புகார் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மாற்றுப்பாதையை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

பூம்புகார் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மாற்றுப்பாதையை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய பாலம் கட்டும் பணி

பூம்புகார் அருகே வானகிரி-தரங்கம்பாடி சாலையின் இடையே பழையகரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் இருந்தது. இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதன் அருகே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மாற்றுப்பாதையில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதி கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கேது பகவான் கோவில்

நவக்கிரக தலங்களில் ஒன்றான கேது பகவான் கோவிலுக்கு இந்த மாற்றுப்பாதையின் வழியாக தான் செல்ல வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வானகிரி மீனவர் கிராமம், கீழப்பெரும்பள்ளம், சின்னங்குடி மற்றும் தரங்கம்பாடி வரை உள்ள பகுதிகளுக்கு இந்த சாலை இணைப்பு சாலையாக உள்ளது. மாற்றுப்பாதை சேதம் அடைந்த காரணத்தால் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி தரங்கம்பாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே உடனடியாக மாற்றுப் பாதையை பலப்படுத்தி வாகன போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story