திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஒரே நாளில் சுமார் 50 டன் மீன் விற்பனையாகியது.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஒரே நாளில் சுமார் 50 டன் மீன் விற்பனையாகியது.
x

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஒரே நாளில் சுமார் 50 டன் மீன் விற்பனையாகியது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஒரே நாளில் சுமார் 50 டன் மீன் விற்பனையாகியது.

மக்கள் கூட்டம்

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் உள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் இருந்த மீன்பிடி தடை காரணமாக இந்த மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தடை காலம் முடிந்து மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டிற்கு அதிக அளவில் மக்கள் வருகின்றனர். நேற்று காலை மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நாட்களாக இந்த மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில மீன்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது பல்வேறு வகையான கடல் மீன்களின் வரத்து உள்ளது. இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் நேற்று ஒரே நாளில் கடல் மீன், டேம் மீன் உள்பட சுமார் 50 டன் மீன் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வஞ்சிரம் ரூ.1200

மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை வாவல் ரூ.1000, கருப்பு வாவல் ரூ.900, வெள்ளை பாறை ரூ.450, கருப்பு பாறை ரூ.400, மத்தி ரூ.150, அயிலை ரூ.200, முரல் ரூ.300, இறால் ரூ.350 முதல் ரூ.400, வௌமீன் ரூ.300 முதல் ரூ.400, சங்கரா ரூ.350, நகரமீன் ரூ.400, ஊழி ரூ.400, நண்டு ரூ.300, கிழங்கான் ரூ.180, நெத்திலி ரூ.150 முதல் ரூ.250, கோலா ரூ.150, சூரை ரூ.150 ஆகிய விலைகளிலும், டேம் வகையில் ரோகு ரூ.140, டேம்பாறை ரூ.130, நெய்மீன் ரூ.100, கட்லா ரூ.160, ஜிலேபி ரூ.100 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை விட நேற்று ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் குறைவாக இருந்தது.

Next Story