வீடுகளில் கருப்பு கொடி கட்டிய பொதுமக்கள்
வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டினர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர், திருச்சி மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்டது ஆகும். இந்நிலையில் காருண்யா நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்து, 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் அப்பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.