வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்களை தேடி அலையும் மக்கள்


வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்களை தேடி அலையும் மக்கள்
x

தண்ணீர் முழுமையாக வடியாத நிலையில், தொலைந்து போன வாகனங்களை தேடி பொதுமக்கள் அலைவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

தற்போது மழை நின்றும், தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் இருப்பதால், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு குளங்கள் உடைந்ததால், திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்தது.

அப்போது, சாலையில் சென்ற கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஸ்ரீவைகுண்டம், பொன்னன்குறிச்சி பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் முழுமையாக வடியாத நிலையில், தொலைந்து போன இருசக்கர வாகனங்களை தேடி பொதுமக்கள் அலைவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story