பொதுமக்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்


பொதுமக்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
x

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

விருதுநகர்


காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் யூனியன் ரோசல்பட்டி கிராம துணை சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாமினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் 143 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. முகாமில் தொடர் காய்ச்சல் உள்ளவா்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் அதிக காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் காய்ச்சல் சிகிச்சையுடன் அப்பகுதியில் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுவாச நோய்

தற்போது பரவி வரும் காய்ச்சல் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும்.

இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மற்றும் துணைசுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் யசோதா மணி, அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story