செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x

கும்பகோணத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெரு அருகே காசி விஸ்வநாதர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் எனக் கூறி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காசி விஸ்வநாதர் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story