மேல்பரிகத்தில் வாகனம் மோதி உடைந்து விழுந்த மின்கம்பம் மின்தடையால் பொதுமக்கள் அவதி

மேல்பரிகத்தில் வாகனம் மோதி மின்கம்பம் உடைந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள மேல்பரிகம் அடுத்த மரணப்பாறை அருகில் சாலையோரத்தில் மின்கம்பம் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மின்கம்பம் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் உடைந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் மின்விபத்து நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் உடைந்து விழுந்ததால், குண்டியநத்தம், மேல்பரிகம் ஆகிய பகுதியில் மின்தடை ஏற்பட்டது. புதிய மின்கம்பம் அமைக்க இரவு வரை நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்து வெள்ளிமலை மின்வாரிய பொறியாளர் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






