திருவண்ணாமலையில் முதல் அமைச்சருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு: புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் அரசு விழா 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த முதல் அமைச்சர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கைகொடுத்தார். பின்னர் புதிய திட்டங்களுக்கு அடிக்க நாட்டியதுடன், ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் மக்களுக்கு வழங்கினார்.
Related Tags :
Next Story