நோய் தொற்று பரவல் அதிகரித்தும் முககவசம் அணிவதில் அக்கறை காட்டாத பொதுமக்கள்


நோய் தொற்று பரவல் அதிகரித்தும்  முககவசம் அணிவதில் அக்கறை காட்டாத பொதுமக்கள்
x

மதுரையில் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அக்கறை காட்டவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை


மதுரையில் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அக்கறை காட்டவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

காய்ச்சல் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தினந்தோறும் கொரேனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ஆஸ்பத்திரிக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க முககவசம் அணிவதன் அவசியம் குறித்து டீன் ரத்தினவேல் தலைமையில் மருத்துவ குழுவினர் பல்வேறு கட்டங்களாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதுபோல், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கும் முககவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்குள் சரிவர முககவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனால் நோய் தொற்றும் பரவி வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

டாக்டர்கள் வேதனை

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருந்தாலும் நாளொன்றுக்கு 2 நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகத்தான், முககவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

ஆனால், பொதுமக்கள் அதனை சரிவர கடைபிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று எளிதாக பரவி விடுகிறது. எனவே, முக கவசம் அணியும் விஷயத்தில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிக்குள் இருக்கும்போது கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றனர்.


Next Story