முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுக்கோட்டை

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மறைந்த முன்னோர்களுக்கு தை, ஆடி அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் தொடக்கம் மற்றும் கடைசி தேதி என 2 அமாவாசை தினங்கள் வருகிறது. இந்த 2 தினங்களிலும் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்கலாம் என ஆன்மிகவாதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி ஆடி மாதம் பிறந்த இன்று அமாவாசை தினம் அமைந்தது. இதையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். நீர்நிலைகளில் புனித நீராடினர்.

புதுக்கோட்டையில் பல்லவன் குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். இதற்காக நகராட்சி சார்பில் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. புரோகிதர்கள் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அமர வைத்து, அவர்களது மறைந்த முன்னோர்களின் பெயர், நட்சத்திரம் உள்ளிட்டவற்றை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பிண்டங்களை நீர்நிலைகளில் கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் அருகில் சாந்தநாத சாமி கோவிலிலும் தரிசனம் செய்தனர்.

கோவிலில் வழிபாடு

இதேபோல ஆடி அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்யையொட்டி கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் கோவில்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ஆடி மாதம் இன்று பிறந்த நிலையில் பெண் பக்தர்கள் விரதத்தையும் தொடங்கினர்.

ஆடி மாத கடைசியான ஆகஸ்டு 16-ந் தேதியும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.


Next Story