கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தொிவித்தாா்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அவர்களின் வாழ்வாதாரம் உயர உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் இயக்குவதற்கு உரிமம் வழங்கியுள்ளது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு விதிகளின் படி விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினியில் நல்ல அனுபவம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்கவேண்டும். இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்க வேண்டும். மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.

மேலும் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைப்பதுடன், தடையற்ற இணையதள சேவையும் பெற்று இருப்பது இத்திட்டத்தில் அவசியமானதாகும்.

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என்பது தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டுவதற்கு https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story