மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
x

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் 18 வயது முதல் 60 வரையுள்ள காதுகேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், கால் பாதிக்கப்பட்டோர், 40 சதவீதம் மிதமான மனவளர்ச்சி குன்றியோர், 75 சதவீதத்துக்கு மேல் பாதிப்புள்ள கடுமையான மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடக்கிறது. இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், தையல் பயிற்சி பெற்ற சான்று, 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story