தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x

தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுயதொழிலை ஊக்குவிக்க...

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23-ம் நிதியாண்டிற்கு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாத, வாய்பேச முடியாத, மிதமான மனவளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 60 வயது வரையும், கடுமையான மனவளர்ச்சி குறையுடைய (75 சதவீதத்திற்கு மேற்பட்ட) மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் தையல் பயிற்சி பெற்றிருப்பின், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

16-ந் தேதிக்குள்...

இதற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் தங்களது அடையாள அட்டை (மருத்துவ சான்றுடன் அனைத்து பக்கங்கள்), தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1, சுய முகவரி யிட்ட விண்ணப்ப கடிதத்துடன் மேற்குறிப்பிட்ட நகல்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதிய கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story