மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

பொறையாறு அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது

மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகா உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக பொறையாறு அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி, ஒன்றிய குழு உறுப்பினர் சகிலா அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுவாசல், பட்டாவரம், செருகடம்பனூர், கொங்கராயன்மண்டபம், நல்லூச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்து 172 பேர் மனுக்கள் அளித்தனர். அதில், 157 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 15 மனுக்கள் மேல் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முகாமில், 6 பேருக்கு புதிய குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலர் பாபு வழங்கினார். முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் மரியஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






1 More update

Next Story