மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெ.24 வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி மலைக்கிராமத்தில்மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை தாங்கினார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ. பூஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை வடக்கு தாசில்தார் சரவணன் வரவேற்றார். முகாமில் மக்களின் கோரிக்கை மனுக்களை ஆர்.டி.ஓ. பெற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பேசும்போது, மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். பின்னர் புதிதாக 15 பேருக்கு ரேஷன் கார்டு, 24 பேருக்கு ஓய்வூதிய சான்று, 32 பேருக்கு விவசாய தெளிப்பான் வழங்கப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா கேட்டு பலர் முறையிட்டனர். இதற்கு தகுதி பெற்று இருந்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசி மதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story