மக்கள் குறை தீர்க்கும் முகாம்


மக்கள் குறை தீர்க்கும் முகாம்
x

நெல்லை போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) அனிதா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, 18 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் சுமார் 50 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story