காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 450 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ராதிகா என்பவர் பேட்டரியில் இயங்கும் சிறப்பு நாற்காலி வண்டி வழங்கக் கோரி மனு அளித்தார். மனுதாரருக்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமைக் கொடை நிதியிலிருந்து ரூ.99,900 மதிப்பாலான சிறப்பு நாற்காலி வண்டியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிதி உதவி

மேலும், காஞ்சீபுரம் வட்டம், களியனூர் ஊராட்சியை சேர்ந்த சகோதரிகளான ஜென்னி மற்றும் பிரீத்தி ஆகிய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாவட்ட கலெக்டருக்கு தலா ரூ.5,000 அரசு பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story