திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருவள்ளூர்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டம் காரணி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினருக்கு கலெக்டர் வழங்கினார். மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story