மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 269 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 மதிப்பில் ஒரு பயனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 மதிப்பில் காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.