கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைகேட்பு கூட்டம்: ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்


கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைகேட்பு கூட்டம்: ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ரூ.23¾ லட்சத்தில் மதிப்பிலான நலத்திட்ட உதவிகைள கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 372 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 21 பேரிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 89 பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 62 ஆயிரத்து 162 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட தாட்கோ மேலாளர் ஆனந்தமோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story