யூனியன் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்


யூனியன் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நல்லாட்சி வார விழாவையொட்டி கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, யூனியன் தலைவி சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். முகாமில் கீழப்பாவூர் யூனியன் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் துறை வாரியாக பிரித்து, உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும் என யூனியன் தலைவி காவேரி சீனித்துரை தெரிவித்தார்.


Next Story