மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை குமரன் கண்டன உரையாற்றினார். இதில் தலித் சமுதாயத்தை தரக்குறைவாக விமர்சித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story