மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிறுபான்மை மக்கள் நலக்குழு, மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிறுபான்மை மக்கள் நலக்குழு, மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2023 7:31 PM GMT (Updated: 24 Jun 2023 11:26 AM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிறுபான்மை மக்கள் நலக்குழு, மின் ஊழியர்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிறுபான்மை மக்கள் நலக்குழு, மின் ஊழியர்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம்அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜங்ஷனில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதன் மாநகர செயலாளர் கார்கி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு போல் சாதி ஒழிப்புக்கும் சட்டம் இயற்ற வேண்டும், விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அனைத்து மக்களும் சமமாக வழிபட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சிறுபான்மை மக்கள் நலக்குழு

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தென்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார். இதில் வெளிநாடுகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களின் கல்விக்கடன், வட்டி மானியம் ஆகியவற்றை நிறுத்தியதை கண்டித்தும், கல்வி உதவி தொகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மின் ஊழியர் மத்திய அமைப்பு

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி, மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்க வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story