மத்திய அரசைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி, பெரியார் திராவிட கழக நிர்வாகி பரத், கம்யூனிஸ்டு கட்சி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கடந்த நான்கு மாதமாக தொடரும் மணிப்பூர் வன்முறைக்கு பா.ஜ.க அரசே காரணம் எனவும், அரியானா பகுதியில் ஜாதி மத இனவெறி கலவரம், பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் வன்முறை வெறுப்பு அரசியல் சி.ஏ.ஜி அறிக்கைப்படி பல லட்சம் கோடி ஊழல், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே மொழி என்பது போன்ற செயல்பாடுகளால் மத்திய அரசின் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு, மாநில அரசின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி வெங்கட் நன்றி கூறினார்.