மதுரை யானை மலையில் ஏறி மக்கள் போராட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மதுரை யானை மலையில் ஏறி மக்கள் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மதுரை யானை மலையில் ஏறி மக்கள் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம்
மணிப்பூரில் ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை, மற்றொரு சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அதில் ெதாடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரையிலும் நேற்று ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தன.
யானை மலையில் போராட்டம்
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானைமலை மீது ஏறி அப்பகுதி மக்கள் மற்றும் எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள், யானை மலை மீது அமர்ந்து, மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து வந்த ஒத்தக்கடை போலீசார், மலைமீது ஏறி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.