மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ஐடாபொன் செல்வி, துணைத்தலைவர் தங்கராஜ், துணைச் செயலாளர் லட்சுமண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மக்கள் நலப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலம் முறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story